உடன்குடியில் தலைதீபாவளி கொண்டாட வந்த புதுமண தம்பதியின் புதிய ஆடைகளை மர்மநபர் திருடிச் ெசன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


உடன்குடியில் தலைதீபாவளி கொண்டாட வந்த புதுமண தம்பதியின் புதிய ஆடைகளை மர்மநபர் திருடிச் ெசன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
x
தினத்தந்தி 5 Nov 2021 9:11 PM IST (Updated: 5 Nov 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் தலைதீபாவளி கொண்டாட வந்த புதுமண தம்பதியின் புதிய ஆடைகளை மர்மநபர் திருடிச் ெசன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உடன்குடி;
உடன்குடியில் தலைதீபாவளி கொண்டாட வந்த புதுமண தம்பதியின் புதிய ஆடைகளை மர்மநபர் திருடிச் ெசன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தலைதீபாவளி
உடன்குடியைச் சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்தஆண்டு திருமணம் நடந்தது இந்த புதுமண தம்பதி் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 
இந்த ஆண்டு அந்த தம்பதிக்கு தலை தீபாவளி ஆகும். இதற்காக மணப்பெண்ணின் தந்தை, தலை தீபாவளிக்கு தேவையான புதிய ஆடைகளை சென்னையில் வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்து தலை தீபாவளியை கொண்டாட வங்கி மூலம் பணம் அனுப்பினார். 
புத்தாடை பார்சல் திருட்டு
புதுமண தம்பதியும் தங்களுக்கும், தங்களது மாமன், மாமியாருக்கும் புதியஆடைகளை சென்னையில் வாங்கி ஒரே பார்சலில் வைத்தனர். அந்த பார்சலுடன் சென்னையிலிருந்து உடன்குடிக்கு ஒரு தனியார் பஸ்சில் வந்ததாக தெரிகிறது. அந்த பஸ்சில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்துள்ளது.  உடன்குடி வந்து இறங்கிய புதுமண தம்பதியினர் ஆடைகள் இருந்த பார்சல் வைத்த இடத்தை பார்த்தனர். ஆனால் பார்சலை காணாமல் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழியிலுள்ள ஊரில் இறங்கிய மர்ம நபர் யாரோ அந்த பார்சலை திருடி சென்றது தெரிய வந்தது.
பரபரப்பு
நொந்துபோன புதுமாப்பிள்ளை மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு வெறும் கையுடன் சென்றுள்ளார். நடந்த விசயத்தை கேட்ட மாமனார் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் உடனடியாக உடன்குடியிலுள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்று மீண்டும் புத்தாடைகளை வாங்கி தலைதீபாவளியை புதுமண தம்பதியினர் கொண்டாடாடினர்.
தலைத்தீபாவளி கொண்டாட வந்த புதுமண தம்பதியிடம் புத்தாடைகள் திருடப்பட்ட சம்பவம் உடன்குடி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story