முத்துப்பேட்டை அருகே முயல்களை வேட்டையாடிய 5 பேர் கைது


முத்துப்பேட்டை அருகே முயல்களை வேட்டையாடிய 5 பேர் கைது
x

முத்துப்பேட்டை அருகே முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

வனத்துறையினர் ரோந்து

முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாஹிர் அலி தலைமையில் வனக்காப்பாளர்கள் சகிலா, சிவநேசன், கணேசன் ஆகியோர் முத்துப்பேட்டை அருகே உள்ள தொண்டியகாடு முதல் அதிராம்பட்டினம் வரை நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரவக்காடு அருகே சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வேலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது24), ஜெயசங்கர் (37), விக்னேஷ் (27), அன்பு (31), நாகராஜ் (32) ஆகியோர் என்பதும், இவர்கள் முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. 

அபராதம்

இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட முயல்கள், அவற்றை பிடிக்க பயன்படுத்திய வலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story