பள்ளிபாளையம் அருகே மொபட்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
பள்ளிபாளையம் அருகே மொபட்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருேக மொபட்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
விசைத்தறி தொழிலாளி
பள்ளிபாளையம் அருகே உள்ள எலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வீட்டுக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கிழக்கு தொட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே குமாரபாளையத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், சுரேஷ் ஓட்டி சென்ற மொபட்டும் நேருக்கு நேர் மோதியது.
விசாரணை
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் உயிருக்கு போராடினார். அவரையும், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முருகேசனையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முருகேசன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story