தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை திருவிழா


தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை திருவிழா
x
தினத்தந்தி 5 Nov 2021 11:45 PM IST (Updated: 5 Nov 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று காலை சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.

தர்மபுரி,

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று காலை சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.

கந்தசஷ்டி லட்சார்ச்சனை

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 57-வது ஆண்டு கந்தசஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று காலை தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. 
இதையடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூகங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வருகிற 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சாமிக்கு 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள் திருமுறை பாராயணத்துடன் நடைபெற உள்ளது.

சூரசம்ஹார விழா

விழாவின் முக்கிய நாளான வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சிவசுப்பிரமணிய சாமி புறப்பாடும், பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை சிவசுப்பிரமணிய சாமி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  தொடர்ந்து இரவு 12 மணிக்கு சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பொன் மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சபரீஸ்வரி மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

Next Story