தினத்தந்தி புகார்
தினத்தந்தி புகார்
சாலை சீரமைக்கப்படுமா?
அழகியபாண்டியபுரம் அடுத்த கேசவன்புதூரில் இருந்து மேலபுதூர் செல்லும் சாலை உள்ளது. இந்த மேலபுதூரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழிமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன் தேவஈவு, மேலபுதூர்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமன்புதூர் சிறுமலர் தெருவில் மீன்சந்தையும், ஒரு தனியார் பள்ளியும் உள்ளது. இந்த தெருவில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் நெடுஞ்சாலையோடு இணையும் பகுதி மிகவும் குறுகலாகவும், இருபுறமும் அலங்கார தரைஓடுகள் மற்றும் கழிவுநீர் ஓடையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீர் ஓடை, தரை ஓடுகள் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுவாமிதாசன் பிரான்சிஸ், சிறுமலர் தெரு.
மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல்குழி ஊர் சந்திப்பில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்க எடுக்க வேண்டும்.
சு.ஜெயராம்,பொட்டல்குழி.
வடிகால் ஓடை தேவை
நாகர்கோவில் ராமவர்மபுரம் கிழக்கு சற்குணவீதியில் சுடலைமாடன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள தெருவில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர் வடியாமல் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
-கோபகுமார், சர்குணவீதி.
பயணிகள் அவதி
நாகர்கோவில் கோட்டாரில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு பகுதிக்கும் இடையே கோட்டார் பஸ் நிறுத்தம் உள்ளது. கோட்டார் வந்து செல்லும் ஏராளமான பயணிகள், வியாபாரிகள் பயன்பெற்று வருகிறார்கள். சிலர் பஸ் நிறுத்தம் முன் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பஸ்களையும் தவற விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன்கருதி பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.சிவக்குமார், நாகர்கோவில்.
தொற்று நோய் பரவும் அபாயம்
தக்கலை கல்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியில் உள்ள தெருவில் வடிகால் ஓடை இல்லாதால் நடைபாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் ஓடை அமைக்க வேண்டும்.
-கோலப்பன்,
கொல்லன்விளை.
Related Tags :
Next Story