தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
மதுக்கடையை அகற்ற வேண்டும்
ராமநாதபுரம் காட்டு பரமக்குடி பகுதியில் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பெண்களும், மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். இந்நிலையில் மதுபிரியர்கள் குடித்து விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டும், சாலையில் அலங்கோலமாக படுத்தும் கிடக்கின்றனர். மது பிரியர்களின் அட்டகாசத்தால் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே, இந்த மதுக்கடையை அகற்றி வேறு இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, பரமக்குடி.
பயணிகள் நிழற்குடை தேவை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதன் காரணமாக இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக முதியவர்களும், கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். பயணிகளின் நலன்கருதி இங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?
சிவகவி, கரிசல்குளம்.
பழுதடைந்த பஸ்கள்
திருமங்கலத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் பஸ்சில் மேற்கூரை வழியாக பஸ்சுக்குள் தண்ணீர் அதிகளவில் கசிகிறது. இதன் காரணமாக பஸ்சில் உட்கார முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகளும், முதியவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பஸ்சுக்குள் குடைபிடித்துக்கொண்டு நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, மதுரை.
தேங்கி நிற்கும் மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு பஞ்சாயத்து புதூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சாலையில் தண்ணீர் செல்ல வழியின்றி குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கொசுத்தொல்லையும் அதிமாக உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை வேண்டும்.
நிஷாந்த், புதூர்.
சாக்கடை கால்வாயில் உடைப்பு
மதுரை மாடக்குளம் 75-வது வார்டு பெரியார் நகர் 3-வது குறுக்கு தெரு ஆகாஷ் நகரில் பாதாள சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முஹம்மது, மாடக்குளம்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் பகலில் சாலையின் நடுவில் படுத்து தூங்குவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. பொதுமக்களின் நலன்கருதி நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
குமார், சிங்கம்புணரி.
குண்டும், குழியுமான சாலை
மதுரை நகரில் பல இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story