கேரளாவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: செங்கோட்டை-கோட்டைவாசல் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
செங்கோட்டை-கோட்டைவாசல் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
செங்கோட்டை:
கேரள மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்த கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கேரள மாநிலத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதையடுத்து தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் கோட்டைவாசலுக்கு செங்கோட்டையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கேரளாவில் வேலை நிறுத்தம் காரணமாக இந்த 3 பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கோட்டைவாசலுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ஆட்டோ, கார்களில் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story