பண்பொழி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது


பண்பொழி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 2:13 AM IST (Updated: 6 Nov 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

பண்பொழி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அச்சன்புதூர்:
பண்பொழி அருகே வனப்பகுதியில் கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர்கள் அம்பலவாணன், செல்லத்துரை, வனக்காப்பாளர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேட்டை நாய்களுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற மேக்கரையை சேர்ந்த கண்ணன் (வயது 24), மீனாட்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் (19) அருண் (19), ஆகாஷ் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story