மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 6 Nov 2021 2:46 AM IST (Updated: 6 Nov 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்

உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). விவசாயி. தீபாவளியன்று அதிகாலை தனது தோட்டத்திற்கு சென்ற அவர், போர்வெல் மோட்டாருக்கு செல்லும் வயரை மிதித்ததாக தெரிகிறது. மின்கசிவின் காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உப்பிலியபுரம் போலீசார், ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story