நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மீது கேரள பெண் புகார்
முன்னாள் அமைச்சர் மீது கேரள பெண் புகார்
நெல்லை:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பிளாப்புழா ஹரிபாடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் மனைவி சர்மிளா (வயது 40). இவர் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நானும், எனது கணவரும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் நிறுவனங்கள் நடத்தி வருகிறோம். கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களுக்கு ஒரு திருமண வீட்டில் அறிமுகமானார். பின்னர் அடிக்கடி எங்கள் நிறுவனத்திற்கும், வீட்டுக்கும் வந்து சென்றார். எங்களுடன் இணைந்து முதலீடு செய்து தொழில் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அவருக்கு நாங்கள் பிரபல நகைக்கடை உரிமையாளரை அறிமுகப்படுத்தினோம். பின்னர் நகை நிறுவனத்தினருக்கும், எங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் எர்ணாகுளத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2017-ம் ஆண்டு ரூ.14 கோடி நகைகளை சென்னை, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீடுகளிலும், கோவையில் உள்ள அவரது மாமனார் வீட்டிலும் ஒப்படைத்தோம். 2018-ம் ஆண்டில் தொழில் முதலீட்டுக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் விஜயபாஸ்கரிடம் பணம் கேட்டபோது கொடுக்க மறுத்தார். பின்னர் ரூ.3 கோடி விஜயபாஸ்கர் தரப்பில் தந்தனர். இனி பணம் கேட்டால் கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள். அப்போது அவர் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்ததால் என்னால் அவருக்கு எதிராக புகார் அளிக்க முடியவில்லை.
தற்போது தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க உள்ளேன். வழக்கு தொடர்பாக தமிழகத்திற்கு வர வேண்டி உள்ளதால் எனக்கும், எனது கணவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story