அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாகின.
சேலம்
அமாவாசை
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இங்கு வழக்கத்தைவிட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை நடைபெறும்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தீபாவளியன்று அமாவாசை என்பதால் உழவர் சந்தைகளில் காலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காய்கறிகள், பழங்கள், வாழை இலை, தேங்காய், கீரை வகைகள், பூசணிக்காய் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக அகத்தி கீரைகளை ஏராளமானோர் வாங்கி சென்றனர்.
ரூ.77 லட்சம்
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 831 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 240 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது. இதன்மூலம் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.77 லட்சத்து 73 ஆயிரத்து 435-க்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நடந்ததாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story