விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி
விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி
பொங்கலூர்,
பொங்கலூரில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியன இணைந்து விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த பயிற்சியின் போது தென்னை மரம் ஏறும் கருவியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சியின் முதல் நாளில் 15 அடி உயரமும், அடுத்தடுத்த நாட்களில் 65 அடி உயரம் வரையிலும் கருவிகள் மூலம் எப்படி தென்னை மரம் ஏறுவது? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 16 ஆண்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 20 பேர் கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 மதிப்புள்ள தென்னை மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் பயிற்சியின் நிறைவாக அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின்போது உதவி பேராசிரியர்கள் தேன்மொழி, கவிதா, திலகம், கால்நடைத்துறை உதவி பேராசிரியை சித்ரா ஆகியோர் தங்கள் துறை குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சியை உடுமலையை சேர்ந்த ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தனர்.
Related Tags :
Next Story