குவிந்து கிடக்கும் காய்கறி, பழ கழிவுகள்


குவிந்து கிடக்கும் காய்கறி, பழ கழிவுகள்
x
தினத்தந்தி 6 Nov 2021 7:35 PM IST (Updated: 6 Nov 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

குவிந்து கிடக்கும் காய்கறி, பழ கழிவுகள்

ஊட்டி

ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் விவசாயிகள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீபாவளி பண்டிகையையொட்டி உழவர் சந்தைக்கு வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் விற்பனை விறு விறுப்பாக நடந்தது. அப்போது சேகரமான காய்கறி, பழ கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், சந்தையில் ஓரிடத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. 

இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story