விஷம் குடித்து மாணவர் தற்கொலை
விஷம் குடித்து மாணவர் தற்கொலை
ஊட்டி
ஊட்டி அருகே உள்ள அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 47). விவசாயி. இவரது மகன் மனோஜ்குமார்(13). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையில் மனோஜ்குமார் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்தபோது, சேனலை மாற்ற ரிமோட்டை அக்காவிடம் கேட்டார். ஆனால் அவர் ரிமோட்டை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனோஜ்குமார் விஷம் குடித்து மயங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கேத்தி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. சேனல் மாற்ற ரிமோட் தராததால் மனமுடைந்து 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story