இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கூடலூர்:
கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க செயலாளர் கொடியரசன் தலைமை தாங்கினார். முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க செயலாளர் சதீஷ் பாபு முன்னிலை வகித்தார். இதில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், பீர்மேடு தாலுகா மற்றும் முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்டவற்றை தேனி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலசங்க தலைவர் அழகேசன், 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Next Story