அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யை தாக்கிய உறவினர் கைது


அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யை தாக்கிய உறவினர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 8:04 PM IST (Updated: 6 Nov 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யை தாக்கிய உறவினர் கைது

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான இவர், கடந்த 4-ந் தேதி(தீபாவளி) இரவு 10 மணியளவில் குடிபோதையில் ஆடையின்றி முத்தாளம்மன் பேட்டை பகுதியில் உள்ள உறவினரான கோபி(47) என்பவரது வீட்டுக்குள் சென்றார். இதனால் கோபமடைந்த கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. 

இது தொடர்பாக குன்னூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்ததன்பேரில் கோபாலகிருஷ்ணன் மீது கொலை மிரட்டல், அடி-தடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கோபாலகிருஷ்ணன் நேற்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தீபாவளி அன்று இரவில் நான் எனது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது என்னிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று கோபி அழைத்ததால் அவரது வீட்டுக்கு சென்றேன். எங்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருக்கிறது. 

நான் ஆடையின்றி செல்லவில்லை. கோபி தனது மகனுடன் இணைந்து என்னை கீழே தள்ளி தாக்கிார். காயம் அடைந்து சட்டையில் ரத்தம் வழிந்த பிறகு என்னை அவமானப்படுத்த செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தார். எனது பெயருக்கும், கட்சி பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று விளக்கம் அளித்து உள்ளார்.

Next Story