குடிநீர் வினியோக பாதிப்பை சரிசெய்ய கோரிக்கை


குடிநீர் வினியோக பாதிப்பை சரிசெய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2021 9:21 PM IST (Updated: 6 Nov 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் குடிநீர் வினியோக பாதிப்பை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொண்டி, 
திருவாடானை யூனியனில் குடிநீர் வினியோக பாதிப்பை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அவதி
திருவாடானை யூனியனில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அலட்சியத்துடன் செயல்படுவதால் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறுவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். 
இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பகுதியில் பணிகளை மேற்கொள்வதால் மிகுந்த அலட்சியத்துடன் இருந்து வருகின்றனர்.இந்த பகுதியில் தேளூர் கிராமத்திற்கு குடிநீர் செல்லவில்லை. இது குறித்து பலமுறை புகார் செய்தும் பணியாளர்கள் குடிநீர் வினியோகம் நடைபெற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 
கோரிக்கை
எனவே திருவாடானை பகுதியில் பணிபுரியும் குடிநீர் பராமரிப்பு பணியாளர்களை மாறுதல் செய்ய வேண்டும். மாற்று பணியாளர்கள் மூலம் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாடானை வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன், பாண்டுகுடி ஒன்றிய கவுன்சிலர் சாந்தா கணேசன் ஆகியோர் யூனியன் தலைவர் முகமது முக்தார், குடிநீர் வாரிய உதவி செயற் பொறியாளர் முருகேசன் ஆகியோரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்ததுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

Next Story