கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமை முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். தடுப்பூசிசெலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முனைவென்றி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வீடுகள் தேடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வீ.பெத்த னேந்தல் கிராமத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற கபடி போட்டியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இளைஞர்களுக்கு விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக தனிக் கவனமும், அக்கறையும் செலுத்தும் கபடி போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், விவசாய அணி காளிமுத்து, அரசு வக்கீல் பார்த்தசாரதி, கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அய்யாசாமி, ராஜபாண்டி, மலைமேகு, இளங்கோ, கிளை செயலாளர்கள் ராமன், கண்ணையா, தனசேகரன், ஊராட்சி தலைவர்கள் குழந்தை பாண்டியன், குருவம்மாள், தங்கவேல், சுந்தர்ராஜ் மற்றும் கிளைக் கழக, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story