அடகுகடையில் போலி நகைகளை வைத்து ரூ.10 லட்சம் மோசடி
அடகுகடையில் போலி நகைகளை வைத்து ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
அடகுகடையில் போலி நகைகளை வைத்து ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நகை அடகு கடை
தேவகோட்டை அருகே உள்ள கண்டியூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 40). இவர் காரைக்குடி சந்தைப் பேட்டை பகுதியில் நகை அடகு கடை மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கடையில் காளவாய் பொட்டல் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 29) என்ற பெண்ணை நகை அடகு பிடிக்கும் பணியில் அமர்த்தி இருந்தார். புவனேஸ்வரி சிலரின் பெயரில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்துவிட்டாராம்.
இதனை அறிந்த ஜனார்த்தனன், புவனேஸ்வரியிடம் கேட்டபோது புவனேஸ்வரியும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து ஜனார்த்தனனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜனார்த்தனன் தெற்கு போலீசில் புகார் செய்தார்.
விசாரணை
அதன்பேரில் போலீசார் புவனேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story