தந்தை-மகனை தாக்கி கொலை மிரட்டல்


தந்தை-மகனை தாக்கி கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 Nov 2021 9:49 PM IST (Updated: 6 Nov 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பாதையில் அமர்ந்து மது அருந்தியதை கண்டித்த தந்தை-மகனை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர், 
 திருப்பத்தூர் அருகே பாதையில் அமர்ந்து மது அருந்தியதை கண்டித்த தந்தை-மகனை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
திருப்பத்தூர் அருகே சில்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது69). இவர் நேற்று அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது சில்லம்பட்டி விருசுளியாறு பாலம் அருகே சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அழகப்பன் தன் மகனுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்லி உள்ளார். 
பின்னர் 2 பேரும், அங்கு இருந்தவர்களிடம் இந்த இடத்தில் யாரும் மது அருந்த கூடாது என கூறி உள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மது அருந்திய இளை ஞர்கள் அழகப்பனையும் அவரது மகன் கண்ணன் (34) ஆகியோரை தரக்குறைவாக பேசி தலையில் கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 
இதில் காயமடைந்த அழகப்பன், கண்ணன் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
5 பேர் கைது
 இதுகுறித்து அழகப்பன் நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருப் பத்தூர் காண்பா நகரை சேர்ந்த மதிவாணன் (21), திருப்பத்தூர் வீரபத்திரன் நகரைச் சேர்ந்த பிரபாகரன் (29), திருப்பத்தூர் காண்பா நகரை சேர்ந்த  செந்தில்குமார் (23),  அப்துல் அஜீஸ் (19), திருப் பத்தூர் சீரணி அரங்கம் பகுதியைச் சேர்ந்த  ராஜ மாணிக்கம் (25) ஆகிய 5 பேர் மீது திருப்பத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Tags :
Next Story