நாமக்கல் அருகே ஓய்வுபெற்ற மருந்தாளுனர் அடித்துக்கொலை அரசு பஸ் கண்டக்டர் கைது
நாமக்கல் அருகே ஓய்வுபெற்ற மருந்தாளுனர் அடித்துக்கொலை அரசு பஸ் கண்டக்டர் கைது
நாமக்கல்:
நாமக்கல் அருகே ஓய்வு பெற்ற மருந்தாளுனர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற மருந்தாளுனர்
நாமக்கல் அருகே உள்ள சாலபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண் (வயது 73). ஓய்வுபெற்ற மருந்தாளுனர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குடியிருக்கும் வீட்டிற்கு புதிதாக தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அருகில் உள்ள பொது குழாயில் இருந்து தண்ணீர் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதை பக்கத்து வீட்டுக்காரரான அரசு பஸ் கண்டக்டர் சுப்பிரமணி தட்டிக் கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது சுப்பிரமணி, இரும்பு கம்பியால் கருப்பணை அடித்ததாக கூறப்படுகிறது.
அரசு பஸ் கண்டக்டர் கைது
இதில் படுகாயம் அடைந்த கருப்பண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ள போலீசார், அரசு பஸ் கண்டக்டர் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஓய்வுபெற்ற மருந்தாளுனர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story