குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 6 Nov 2021 9:56 PM IST (Updated: 6 Nov 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார்.

கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகிய மணவாளன் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(வயது 30). இவரது மனைவி புவனேஸ்வரி(19). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது ஜெயச்சந்திரன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story