ஆடு திருடிய வாலிபர் கைது
ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரிசைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி(வயது 50). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார். அப்போது நள்ளிரவில் ஆடுகள் சத்தம் போட்டது. ஆடுகள் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு மர்ம நபர் ஒரு ஆட்டை மட்டும் தனது மோட்டார் சைக்கிளில் தூக்கி கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார்.
உடனடியாக அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் பின்னாள் துரத்தி சென்றனர். அப்போது கொளப்பாடி பிரிவு ரோடு அருகே ஆடு திருடி சென்றவன் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் நின்றது. பொதுமக்கள் ஆடு திருடிய நபரை பிடித்து குன்னம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர் கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சிவா(21) என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து குன்னம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story