பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை: நீர்த்தேக்கங்கள், 11 ஏரிகள் நிரம்பி வழிகின்றன
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 11 ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்
தொடர் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்உள்ளன. இவை வாயிலாக ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. பெரம்பலூர் தாலுகாவில் 18 ஏரிகளும், குன்னம் தாலுகாவில் 27ஏரிகளும், வேப்பந்தட்டை தாலுகாவில் 28 ஏரிகளும் உள்ளன. இவை தவிர40-க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பு அணைகளும் உள்ளன.பெரம்பலூர் மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக 5 நாட்களாகதொடர்ந்து மழைபெய்துவருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையானபச்சைமலையில் பலத்தமழை பெய்துவருவதால் காட்டாறுகளில் நீர்வரத்துஅதிகரித்துவருகிறது. பச்சைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள லாடபுரம்,மேலப்புலியூர், அன்னமங்கலம், எசனை, விஸ்வக்குடி, தொண்டமாந்துறை,மலையாளப்பட்டி, போன்ற பகுதியில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்டநீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது.
80 சதவீதம் வரை...
பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகிவரும் கல்லாற்றில் மழைநீர்அதிகரித்துவருவதால், அரும்பாவூர் பெரிய ஏரி சிலதினங்களுக்கு முன்புநிரம்பியது. உபரிநீர வழிந்தோடியதால், அரும்பாவூர் சிறிய ஏரியும்நிரம்பியது. இதுதவிர வெண்பாவூர் நூத்தாப்பூர் பாண்டகப்பாடி மேலப்புலியூர் அரசலூர் ஊராட்சிகளில் உள்ள பெரிய ஏரிகளும், கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகளும் நிரம்பி வழிந்துவருகின்றன.நெற்குணம், பேரையூர், வடக்கலூர் அகரம் ஆகிய 3 ஏரிகளும் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி (வெள்ளந்தாங்கி அ ம்மன் ஏரி), துறைமங்கலம் பெரிய ஏரி, வி.களத்தூரில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குரும்பலூர் ஏரி ஆகிய 5 ஏரிகளும் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளன. எழுமூர், வயலூர், ஆய்குடி, கீரனூர், ஒகளுர், பெருமத்தூர் ஆகிய 6 ஏரிகளும்51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. பெரம்பலூர் பெரிய ஏரி உள்பட 15 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் நீர்நிரம்பி உள்ளன.
விவசாயிகள் மகிழ்ச்சி
அரணாரை நீலியம்மன் ஏரி, எசனை, அன்னமங்கலம் ஏரி உள்பட 35 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவான நீர் நிரம்பி உள்ளது. சின்னாறு நீர்த்தேக்கத்தின்கொள்ளளவு 13 அடி ஆகும். மொத்தம் 72 மில்லியன் கனஅடி நீரைதேக்கிவைக்கமுடியும். சின்னாறில் தற்போது 25 சதவீதம் நீர் தேங்கி உள்ளது.விசுவக்குடி அணையின் கொள்ளளவு 26.74 அடி ஆகும். இதில் தற்போது 25.78மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கிஉள்ளது. உபரிநீர் பிரதான மதகுவழியாகதிறந்துவிடப்பட்டுள்ளது. மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில்கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் உயரம் 33.78 அடியாகும். இதில் முழு கொள்ளளவான 212.47 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளது. பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி வரை இம்மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம்: அகரம் சிகூர்-38 மி.மீ. லெப்பைக்குடிகாடு-12 மி.மீ. பெரம்பலூர்-5 மி.மீ. மொத்த மழை அளவு-56 மி.மீ ஆகும்.
Related Tags :
Next Story