மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே நாச்சார்குப்பம் ஊராட்சி கம்மியம்பட்டு பகுதியில் உள்ள கானாற்றில் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் தொடர் கனமழை காரணமாக சுமார் 3 மாத காலமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுமார் 3 மாத காலமாக தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் மிகவும் ஆபத்தான நிலையில் தரைப்பாலத்தில் வழியாக சென்று வருகிறோம்.
அவ்வப்போது பெருவெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிப்படைகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் தரை பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். மருத்துவமனை செல்வதற்கும் தரை பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
எனவே அரசு உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story