தடுப்பணை கட்டிய 8 மாதங்களில் விரிசல்
நெல்லிக்குப்பம் அருகே ரூ.28½ கோடியில் கட்டப்பட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் ரூ.28 கோடியை 70 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. 14.645 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையில் இந்த தடுப்பணை கட்டப்பட்டது.
இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் விஸ்வநாதபுரம் தடுப்பணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தடுப்பணையி்ன் இருபுறமும் கட்டப்பட்ட சிமெண்டு கட்டைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டு, உள்வாங்கி உள்ளது. இதனால் தடுப்பணை பலகீனமடைந்து உள்ளது.
மண் சரிவு
மேலும் தென்பெண்ணையாற்றின் இருபுறமும் கரைகளில் மண் சரிந்து உள்ளன. வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் போது ஆற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
அவ்வாறு மழை வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடும் பட்சத்தில் தடுப்பணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரைகளும் உடைந்து மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே உள்ள தடுப்பணை தரம் இல்லாமல் கட்டப்பட்டதால், தற்போது உடையும் நிலையில் உள்ளது. எனவே மழைவெள்ளத்தில் தடுப்பணை அடித்து செல்லப்படுவதற்கு முன், தடுப்பணையை ஆய்வு செய்து சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும். மேலும் கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story