வாணாபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல்
வாணாபுரம் அருேக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
வாணாபுரம்
வாணாபுரம் அருேக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரிடம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
மோதல்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகில் உள்ள சதாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சம்பவத்தன்று அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்றனர்.
அப்போது மற்றொரு தரப்பினர், மோட்டார்சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வாக்குவாதம் முற்றி தகாத வார்த்தைகளால் ேபசி திட்டி ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாகத் தெரிகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாணாபுரம் போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
சமரச பேச்சுவார்த்தை
நேற்று முன்தினம் மாலை மற்றொரு தரப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் வந்து அப்பகுதியில் உள்ள வீடுகள், மரங்களை சேதப்படுத்தி, கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க இரு தரப்பினரை அழைத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படாததால் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
கஞ்சா விற்பனை செய்வதால் தான் தகராறு
நேற்று தாசில்தார் பரிமளா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகுராணி, தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயசூரியன், சக்திவேல், வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் ஆகியோர் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறப்பட்டது. மேலும் ஒரு தரப்பினர், கஞ்சா விற்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அதை விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும், கஞ்சா விற்பனை செய்வதால் தான் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தனர்.
போலீசார் குவிப்பு
இதற்கிடையே, ஒரு தரப்பினர் கலெக்டரை சந்தித்து தங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கச் சென்றதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story