பிச்சைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது


பிச்சைக்காரர் கொலை வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 11:27 PM IST (Updated: 6 Nov 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் பிச்சைக்காரர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

காட்பாடி

காட்பாடியில் பிச்சைக்காரர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

மோதலில் கொலை

காட்பாடி போலீஸ் நிலையம் அருகில் நிழற்குடை உள்ளது. இங்கு பிச்சைக்காரர்கள் தங்கியிருந்தனர். நேற்று  மாலை 3 பிச்சைக்காரர்கள் அங்கு இருந்தனர். இரவில் அங்கு யார் தங்குவது என்ற போட்டியில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைக்காரரரை தலையில் தாக்கி உள்ளார். மற்றொருவர் அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிச்சைக்காரர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவர் கைது

காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த பிச்சைக்காரரை கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி அதே பகுதியில் மறைந்திருந்தவரை போலீசார் நள்ளிரவில் மடக்கி பிடித்தனர். 

விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த பாபுராஜ் (வயது 46) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள தனபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

அவரைப் பிடிக்க ஆம்பூர், பங்காருபேட்டை, வாணியம்பாடி ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.


Next Story