மத்திகிரி அருகே ஐடிஐ மாணவர் தற்கொலை


மத்திகிரி அருகே ஐடிஐ மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2021 12:03 AM IST (Updated: 7 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே ஐடிஐ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திகிரி:
மத்திகிரி அருகே ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.டி.ஐ. மாணவர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் முனீஸ்வரா லேஅவுட்டை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மகன் முரளி (வயது 19). நாகேஷ் மத்திகிரி நாகொண்டப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முரளி ஓசூர் அரசு ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட முரளி பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் நலம் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
போலீசார் விசாரணை
இது குறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story