பெரும்பாறை அருகே மலைப்பாதையில் சாய்ந்து விழுந்த மரம்


பெரும்பாறை அருகே மலைப்பாதையில் சாய்ந்து விழுந்த மரம்
x
தினத்தந்தி 7 Nov 2021 12:42 AM IST (Updated: 7 Nov 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே கனமழையால் மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைக்கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மதியத்தில் இருந்து இடி, மின்னலுடன் பலத்தமழை கொட்டித்தீர்த்தது.
இதன் எதிரொலியாக மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்தநிலையில் தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே நேற்று அதிகாலை ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. 

Next Story