அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு


அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2021 1:26 AM IST (Updated: 7 Nov 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையினால் கோவிலாறு, பெரியாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

வத்திராயிருப்பு, 
தொடர்மழையினால் கோவிலாறு, பெரியாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
தொடர்மழை 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர் மட்ட உயர்வால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
நிலத்தடி நீர் மட்டம் 
தொடர் மழையின் காரணமாக தற்போது பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 34.45அடியாகவும், கோவிலாறு அணையின் நீர்மட்டம் 27.8 அடியாகவும் உள்ளது. 
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதாலும் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Related Tags :
Next Story