ஆலங்குளத்தில் பலத்த மழை


ஆலங்குளத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 7 Nov 2021 1:33 AM IST (Updated: 7 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இப்பகுதியில் மக்காசோளம் 45 நாட்களுக்கு மேல் உள்ள பயிராகவும். மிளகாய் 20 நாட்களுக்கு மேல் உள்ள பயிராகவும், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு 15 நாட்களுக்கு மேல் உள்ள பயிராகவும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் இந்த மழை பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் கூறினர். கடந்த சில நாட்களாக பயிர்களுக்கு மேல் உரமாக யூரியா, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் போன்ற உரங்களை போட்டு உள்ளனர். இப்போது பெய்யும் மழையால் செடிகளுக்கு போட்ட உரங்கள் சேதாரமின்றி செடிகளுக்கு மேல் உரமாக பயன்படும். உரங்களின் பயன்பாடு செடிகளுக்கு கிடைப்பதால் செடிகள் நோய் இல்லாமல் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 

Related Tags :
Next Story