சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்
திருவாரூர் அருகே 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் விரக்தி அடைந்த கிராம மக்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்;
திருவாரூர் அருகே 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் விரக்தி அடைந்த கிராம மக்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேறும் சகதியுமான சாலை
திருவாரூர் ஒன்றியம் கூடூர் ஊராட்சி மொசகுளம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக சாலை வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலை போக்குவரத்து பயனற்ற நிலையில் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக விவசாயிகள் விளை நிலங்களுக்கும், இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய மயானத்துக்கும் மக்கள் தூக்கி செல்கிறார்கள்.
நாற்று நட்டு போராட்டம்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இறந்தவர்கள் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய கூட முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விரக்தி அடைந்த மொசகுளம் கிராம மக்கள் பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்று திரண்டு சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story