காதலனின் தொந்தரவால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போலீஸ் தற்கொலை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 7 Nov 2021 1:49 AM IST (Updated: 7 Nov 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

காதலனின் தொந்தரவு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

வசாய், 
காதலனின் தொந்தரவு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
திருமண நிச்சயதார்த்தம்
பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாராக இருந்து வந்தவர் தீபாலி கதம். இவரும், நாலாச்சோப்ரா துலின்ஞ் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் வால்மிக் அகிரே என்பவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்து உள்ளனர். இதன்பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காதலர்கள் பிரிந்தனர்.
இதற்கிடையே கடந்த 31-ந் தேதி தீபாலி கதமிற்கு திருமணம் நடத்த மயூர் காம்ளே என்ற வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 16-ந் தேதி 2 பேருக்கும் திருமணம் நடக்க இருந்தது.
செல்போனில் குறுந்தகவல்
இதற்காக பெண் போலீஸ் தீபாலி கதம் விடுமுறை எடுத்து இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மயூர் காம்ளே பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து வால்மிக் அகிரேவின் காதல் விவகாரம் இருப்பதால் திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் போலீஸ் தீபாலி கதம் சொந்த ஊரான புனே டெல்வாடிக்கு சென்றார். கடந்த 3-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் தீபாலி கதமின் சகோதரருக்கு குறுந்தகவல் அனுப்பினார்.
தற்கொலை
அதிகாலை 5 மணி அளவில் அந்த தகவலை சகோதரர் பார்த்த போது இதில், முன்னாள் காதலரான வால்மிக் அகிரேவின் தொந்தரவு காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதி இருந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் உடனே புனே விரைந்தனர். ஆனால் அங்கு செல்லும் முன்பே பெண் போலீஸ் தீபாலி கதம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 சம்பவம் குறித்து யவட் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story