வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 Nov 2021 3:49 AM IST (Updated: 7 Nov 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த பிள்ளையார் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வித்யா. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் பார்த்த போது அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Next Story