ஆன்-லைன் மூலம் வந்த பிரியாணியில் பல்லி
ஆன்-லைன் மூலம் வந்த பிரியாணியில் பல்லி கிடந்தது.
திருச்சி:
திருச்சி பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு திருநாவுக்கரசு (வயது 38). இவருடைய மனைவி அனுஷா (35). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து வரவழைத்த பிரியாணியை தாயும், மகளும் சாப்பிட்டுள்ளனர். அப்போது, பிரியாணியில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு கூச்சலிட்ட இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story