சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது


சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது
x
தினத்தந்தி 7 Nov 2021 3:49 AM IST (Updated: 7 Nov 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த வெள்ளியங்குடிபட்டியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 33). இவர் நேற்று தன்னுடைய வீட்டில் இருந்து கீழத்தானியத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வெள்ளியங்குடிபட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது என்ஜின் பிளக்கில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் மோட்டார் சைக்கிளை சாலையிலேயே விட்டுவிட்டு சண்முகம் மற்றும் குடும்பத்தினர் இறங்கி, விலகிச்சென்றனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து தீ பரவி ேமாட்டார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story