கோயம்பேட்டில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி


கோயம்பேட்டில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 7 Nov 2021 7:32 AM IST (Updated: 7 Nov 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் கோயம்பேடு, ரெயில் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். 

அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

Next Story