கடையின் பூட்டை உடைத்து பட்டாசு திருடிய 5 வாலிபர்கள் கைது
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் கடையின் பூட்டை உடைத்து பட்டாசு திருடிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகையையொட்டி திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் பட்டாசு கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. கடந்த 5-ந்தேதி பட்டாசுகளை சரிபார்த்தபோது ரூ.83 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ்நிலையத்தில் கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் இளங்கோ புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், பட்டாசு கடையின் பூட்டை உடைத்து திருடிய சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 20), ஹானஸ்ட்ராஜ் (19), சூர்யாபிரபு (19) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story