செல்போனில் அதிக நேரம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் அதிக நேரம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2021 10:35 AM IST (Updated: 7 Nov 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் அதிக நேரம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், காந்தி தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் மில்லர். இவருடைய மகள் சந்தியா (வயது 19). இவர், கோவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து இரவு அவரது தந்தை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சந்தியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீசார், சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி்க்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சந்தியா செல்போனில் அதிகநேரம் பேசியதாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு செல்வதாக கூறி ஒரு நாள் பெற்றோருக்கு தெரியாமல் தோழிகளுடன் வெளியே சென்றதாகவும், அதனையும் பெற்றோர் கண்டித்ததாக ெதரிகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story