வேகமாக நிரம்பும் மதுராந்தகம் ஏரி
மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். உத்திரமேரூர், வந்தவாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள நீர் வரத்து மூலம் மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. இந்த ஏரி மூலம் விவசாயிகள் 3 போகம் நெற்பயிரிட்டு வந்தனர். ஏரியில் தண்ணீர் நிரம்பும்போது பாலாற்றில் திறந்து விடப்படுகிறது.அப்போது அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரியில் இருந்து பாலாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அங்குள்ள தடுப்பணைகளில் நிரம்பி அதன் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர்.
23.3 அடி கொள்ளளவை கொண்ட இந்த ஏரி தற்போது 22.8 அடியை எட்டியுள்ளது.
விவசாயி ஒருவர் கூறுகையில்:-
பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஏரி கால்வாய், மதகு, கலங்கல், வருவாய் கால்வாய், உள்ளிட்ட பகுதி களில் சரிவர ஆய்வு செய்து பராமரிக்காமல் மெத்தனப்போக்கில் நடந்து கொள்கின்றனர். மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை தடுப்பணையில் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதகுகள் சரிவர பராமரிக்கப்படாததால் அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story