தீயில் எரிந்து மளிகை கடை நாசம்


தீயில் எரிந்து மளிகை கடை நாசம்
x
தினத்தந்தி 7 Nov 2021 9:06 PM IST (Updated: 7 Nov 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே பழையாறில் தீயில் எரிந்து மளிகை கடை நாசமடைந்தது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழையாறில் தீயில் எரிந்து மளிகை கடை நாசமடைந்தது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. 
மளிகை கடையில் தீப்பிடித்தது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமம் கோட்டையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள்(வயது65). இவர் தனது வீட்டை ஒட்டி மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு காசியம்மாள் வீட்டுக்கு    சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மளிகை கடை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கடையிலிருந்து புகைமூட்டம் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
பொருட்கள் நாசம்
இதன் பேரில், சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீவிபத்தில் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், மின்விசிறிகள், சர்க்கரைமூட்டை, மிளகாய், மல்லி, வெல்லம் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் எரிந்து நாசமடைந்தன. 
ரூ.4 லட்சம் பொருட்கள்
இந்த தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக  மளிகைகடையில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

Next Story