கிருஷ்ணகிரியில் தடகள சாம்பியன் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு
கிருஷ்ணகிரியில் தடகள சாம்பியன் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி:
தடகள போட்டி
தமிழ்நாடு தடகள சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட இளையோர் தடகள சாம்பியன் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நேற்று நடந்தது.
இதில் 14, 16, 18, 20 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தடகள போட்டியில் 100, 200, 400, 800, 1,200 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்றவையும் நடத்தப்பட்டன.
மாநில அளவிலான போட்டி
உதவி கலெக்டர் சதீஷ்குமார், தடகள சங்கத்தின் துணை தலைவர் நடராசன் ஆகியோர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர். செந்தில்குமார் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இருந்து, 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான சாம்பியன் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story