மொரப்பூர் அருகே மது விற்ற வாலிபர் கைது


மொரப்பூர் அருகே  மது விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2021 9:38 PM IST (Updated: 7 Nov 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மொரப்பூர்:
மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மொரப்பூர், சந்தைமேடு, கலைஞர் நகர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலைஞர் நகர் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்பேத் (வயது 45) என்பவர் மதுபாட்டில்கள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story