கயத்தாறு சுங்கச்சாவடியில் பஸ் பயணிகள் போராட்டம்
கயத்தாறு சுங்கச்சாவடியில் பஸ் பயணிகள் போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
நெல்லையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. கயத்தாறு சுங்கச்சாவடியில், அந்த பஸ்சுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்றுகூறி ஊழியர்கள் அந்த பஸ்சை நிறுத்தி வைத்தனர். நீண்டநேரம் அந்த பஸ் நிறுத்தப்பட்டதால், அதில் வந்த பயணிகள் ஆத்திரமடைந்து, அரசு பஸ்சை விடக்கோரி சுங்கச்சாவடியில் அனைத்து கவுண்டர்களிலும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்குவந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாா் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பஸ்சை அனுப்பி வைத்தனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story