பஸ்- கார் மோதல்; அச்சக உரிமையாளர் பலி


பஸ்- கார் மோதல்; அச்சக உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2021 10:39 PM IST (Updated: 7 Nov 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் அச்சக உரிமையாளர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாசரேத்:
நாசரேத்தில் பஸ்-கார் மோதிய விபத்தில் அச்சக உரிமையாளர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அச்சக உரிமையாளர்

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகன் டேனி (வயது 35). அச்சக உரிமையாளர்.
இவர் நேற்று இரவில் தன்னுடைய நண்பர்களான நாசரேத் மணிநகரைச் சேர்ந்த ராஜகண்ணன், சென்னையைச் சேர்ந்த துர்காசுரன் ஆகியோருடன் காரில் நாசரேத்தில் இருந்து மெஞ்ஞானபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

பஸ்-கார் மோதல்

நாசரேத் வாழையடி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த பஸ் எதிர்பாராதவிதமாக காரின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த டேனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ராஜகண்ணன், துர்காசுரன் ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், நாசரேத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிலர் உடன்குடி பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த முருகனிடம் (32) விசாரித்து வருகின்றனர்.

Next Story