தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரத்தில் ரூ.52 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும் நீர்வரத்தை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி தகவல்


தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரத்தில் ரூ.52 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும் நீர்வரத்தை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2021 10:43 PM IST (Updated: 7 Nov 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரத்தில் ரூ.52 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று நீர் வரத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஏரி, குளங்கள் 90 சதவிதம் நிரம்பி விட்டன. மேலும் தென்பெண்ணை ஆறு, வராக நதி, சங்கராபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் அருகே எல்லீசத்திரத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும், அந்த தடுப்பணை பழமையானது என்பதால், அதன் உறுதிதன்மை இழந்து மதகுகள் உள்ள சுவர் ஒரு பகுதி உள்வாங்கி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானலும் இடியும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே, எல்லீஸ்சத்திரம் தடுப்பணையை நேற்று அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆற்றில் நீர் வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல் தளவானூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையையும் அவர் ஆய்வு செய்தார். 

ரூ.52 கோடியில் புதிய தடுப்பணை

ஆய்வு முடிவில் அமைச்சர் பொன்முடி கூறுகையில்,  எல்லீஸ்சத்திரம் தடுப்பணை  கட்டப்பட்டு 70 ஆண்டுகள் கடந்து விட்டதால் அந்த தடுப்பணைக்கு அருகே,  புதிய தடுப்பணை விரைவில் கட்டப்பட உள்ளது.

 இதற்காக ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தளவனூர் தடுப்பணையில்  சேதமடைந்த பகுதியை சரிசெய்ய ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார்.


ஆய்வின் போது கலெக்டர் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகேழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் ஜெயசந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story