மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 7 Nov 2021 10:56 PM IST (Updated: 7 Nov 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

கமுதி,

கமுதி அருகே கட்டாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 38). விவசாயி. இவர் வயலில் தனது மனைவி உமையேஸ்வரியுடன் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் செல்லப்பாண்டி படுகாயம் அடைந்தார், உடனே அவரது மனைவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருநாழி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் இறந்ததை அறிந்து அவரது மனைவி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெருநாழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story