10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2021 11:19 PM IST (Updated: 7 Nov 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே வடகாடு பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சன்னதி  வயல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சேக்அப்துல்லா (வயது 23), ராமச்சந்திரன் (25) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்ததில், மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து  புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து, சேக்அப்துல்லா, ராமசந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story