பள்ளிபாளையம் அருகே விற்பனைக்காக மது பதுக்கியவர் கைது
பள்ளிபாளையம் அருகே விற்பனைக்காக மது பதுக்கியவர் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் கையில் பையுடன் நின்றார். அவரை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து பையை வாங்கி திறந்து பார்த்து சோதனை செய்தனர். அதில் 25 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் அவர் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 52) என்பது தெரியவந்தது. பின்னர் கணேசன கைது செய்த போலீசார் 25 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
=========
Related Tags :
Next Story